பிரபல பாடசாலையில் மாணவனுக்கு நடந்த விபரீதம்! திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கூறும் ஆசிரியை – குற்றப்பார்வை



இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன.

நான்கு வருடங்களாக பாடசாலை மாணவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த ஆசிரியை முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சந்தேகநபராக கருதப்படும் ஆசிரியை சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண முன்வைத்துள்ள இந்த முன் பிணை கோரும் மனு தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க பொலிஸாருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தில் தொடர்புடையதாக அறியப்படும் தற்போது 20 வயதான மாணவன், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும் இதற்காக அவர் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வீடியோக்களை வைத்து மிரட்டுவதாகவும் முன் பிணை மனுவில் ஆசிரியை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களுடன் கடந்த வாரம் நாட்டில் பதிவான சில குற்றச்செயல்களின் தொகுப்பை காணொளியாக பார்க்கலாம்,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.