வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவை 2022 மார்ச் 24, வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார்.
இதன் போது, சுகாதாரச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளிலான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கையில் பிரெஞ்சு நிறுவனங்களின் முதலீடு, இலங்கையில் இருந்தான பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிக்கான சந்தைகளை பிரான்சில் விரிவுபடுத்துதல் (குறிப்பாக தேயிலை, மீன்பிடிப் பொருட்கள், ஆடைகள், இரத்திணங்கள் மற்றும் ஆபரணங்கள்), மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இலங்கைக்கும் பிரான்ஸ் குடியரசிற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாக பிரான்ஸ் செனட்டர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 மார்ச் 25
—