பிலிப்பைன்சில் உள்ள டால் எரிமலை ஆக்ரோஷத்துடன் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
எரிமலையில் இருந்து 1 புள்ளி 5 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறி வருவதால் அதன் ஆக்ரோஷம் தீவிரமடைந்து வருவதை குறிக்கும் 2-ம் நிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எரிமலை அமைந்துள்ள டால் ஏரியை சுற்றியுள்ள மீனவர்கள், மீன் வளர்ப்பு பணி செய்யும் ஊழியர்கள் உட்பட சுமார் ஆயிரம் குடும்பங்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.
எரிமலையின் முக்கியமான, மிகப்பெரிய பள்ளம் வழியாக மாக்மா குழம்புகள் ஊடுவ தொடங்கியிருப்பதால் அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்படக்கூடும் என நிலநடுக்க மற்றும் எரிமலை வெடிப்பு முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மணிலாவிற்கு தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த எரிமலை மிகச்சிறியது தான் என்றாலும் தொடர்ந்து காணப்படும் ஒரு எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.