பீஸ்ட் இஸ் பேக்! IPL வரலாற்றில் தோனி புதிய சாதனை


15-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் விளாசி 2 வருட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எம்எஸ் தோனிக்கு தற்போது வயது 40 ஆகிவிட்ட காரணத்தினால் அவரது பேட்டிங் பாதிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்தன. தோனி கடந்த 2021-ஆம் ஆண்டு சீசனில் 16 போட்டியில் விளையாடி 114 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார். அதேபோல், 2020-ஆம் ஆண்டு சீசனில் தோனி 200 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.

இந்த நிலையில், தோனி தனது கேப்டன் பதவியை விட்டு விலகி, நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் வெறும் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாறி நின்ற நிலையில் தோனி கலத்தல் இறங்கினார். நரைன் நெருக்கடி தர, தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினார்.

பின்னர் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 1 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாச தோனி 38 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்தார். குறிப்பாக கடைசி 8 பந்தில் தோனி 24 ஓட்டங்கள் விளாசினார்.

கடைசி ஓவரில் 4,1,4,0,4,1,4 என தோனி அடுத்தடுத்து பறக்கவிட சமூக வலைத்தளத்தில் Thala is Back என்ற வார்த்தை டிரெண்ட் ஆக தொடங்கியது 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் தோனி அரைசதம் குவித்தார்.

2022 ஐபிஎல் தொடரின் முதல் அரைசதத்தையும் முதல் சிக்ஸரையும் தல தோனி தான் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அரைசதம் விளாசிய வயதான வீரர் என்ற பெருமையை தோனி படைத்தார். தோனியின் இந்த சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இப்போட்டியில், தோனியை தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை. சென்னை அணி 20 ஓவர் முடிவில் வெறும் 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.3 ஓவரில் 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.