மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த 5 நாட்களில் 4 முறை விலையை உயர்த்தியுள்ளனர். 137 நாட்களுக்கு எவ்விதமான விலை உயர்வையும் செய்யாத மத்திய அரசு மார்ச் 22ஆம் தேதி முதல் விலையை உயர்த்த துவங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..?!
இந்தியன் ஆயில் கார்ப்
இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனம் பெட்ரோல் விலையை 70 பைசா உயர்த்தியுள்ள விலையில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் இன்று லிட்டருக்கு 80 பைசா உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் பெரும்பாலான இடத்தில் பெட்ரோல் விலை 80 பைசா உயர்த்தப்பட்டு உள்ளதாகவே கருதப்படுகிறது.
சென்னை
இன்றைய விலை உயர்வின் மூலம் பெட்ரோல், டீசல் விலை கடந்த 5 நாட்களில் 4 முறை உயர்த்தப்பட்ட நிலையில் லிட்டருக்கு 3.20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 76 பைசா உயர்ந்து 104.43 ரூபாயாக உள்ளது. இதேபோல் டீசல் விலை ஒரு லிட்டர் 94.47 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நவம்பர்
நவம்பர் மாதம் எரிபொருள் விலை உயர்வை நிறுத்திய பின்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் சுமார் 30 டாலர் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு இணையாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் லிலையை உயர்த்த வேண்டும் என்றால் ஒரு டாலர் உயர்வுக்கு லிட்டருக்கு 52 பைசா உயர்த்த வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.39 சதவீதம் அதிகரித்து 113.9 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.36 சதவீதம் அதிகரித்து 120.7 டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அடுத்தச் சில மாதங்களுக்கு உயரும்.
Petrol price hiked 4th time in 5 days; Check petrol diesel price in Chennai
Petrol price hiked 4th time in 5 days; Check price in Chennai பெட்ரோல், டீசல் விலை: 5 நாளில் 4 முறை விலை உயர்வு..!