ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கான மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மீண்டும் அடைக்கப்பட்டதை கண்டித்து மாணவிகளும், ஆசிரியைகளும் பேரணி சென்றனர்.
அங்கு, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மட்டுமே பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதற்கு உலகரங்கில் எதிர்ப்புகள் வலுத்தன. இதையடுத்து, பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லலாம் என அறிவித்த தலிபான்கள், வகுப்புகள் ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே மூட உத்தடவிட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ஆப்கான் பொருளாதாரத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக தோஹாவில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா ரத்து செய்தது.