வேலூர்:
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவில் எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து சிதறிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.
புகை மூட்டத்தில் இருந்து தப்பிக்க கழிவறையில் தஞ்சமடைந்த துரைவர்மா (49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) மூச்சு திணறி பலியாகினர்.
கழிவறையிலிருந்து தந்தை, மகள் உடல்களை போலீசார் மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.