உக்ரைன் – ரஷ்யா போர் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வரும் நிலையில் இந்தியா சந்தித்து வரும் பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் பெங்களூருவில் இக்கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் போர் காரணமாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை, போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி, இறக்குமதிகள், இதனால் ஏற்படும் அந்நியச்செலாவணி பற்றாக்குறை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இது தவிர உள்நாட்டிலிருந்து எழுந்துள்ள சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM