மண் காப்போம் இயக்கம்: சோனியா வாழ்த்து| Dinamalar

தொண்டாமுத்தூர்: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு துவங்கியுள்ள, மண் காப்போம் இயக்கத்திற்கு, காங்., தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு, சோனியா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:மண் காப்போம் இயக்கத்தை துவங்கியுள்ள ஈஷாவுக்கு வாழ்த்துக்கள். மண் அழிவை தடுக்க நடக்கும் போரில், இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது. மண் அழிவு பிரச்னை, உலகின் உணவு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். எனவே, நீங்கள் முன்னெடுத்துள்ள இந்த உன்னதமான பணி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.