மாத மாதம் ரூ.5000 பென்ஷன் வேண்டுமா.. இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்க..!

பொதுவாக நம்மில் பலருக்கும் ஓய்வூகாலத்தில் மாத மாதம் ஒரு வருமானம் பென்ஷன் போல இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்போம். குறிப்பாக தனியார் துறையை சார்ந்த ஊழியர்களும், சுயதொழில் செய்வோர், வயதானவர்கள் என ஓய்வுகாலத்தை பற்றிய கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பர்.

அப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கலாம்.

மத்திய அரசின் இந்த ஓய்வூதியம் திட்டம் உங்களுக்கு ஓய்வுகாலத்தினை நிம்மதியாக கழிக்க வழி செய்யும், அதுவும் தினசரி வெறும் 7 ரூபாய் நீங்கள் அதற்காக சேமித்தால் போதுமானது.

பேக்கரி-களுக்கு இனி 18% ஜிஎஸ்டி வரி..? மத்திய அரசு செக்..!

 வயது வரம்பு

வயது வரம்பு

நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் அடல் பென்சன் யோஜனா தான். இந்த திட்டத்தின் கீழ், 18 – 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளை அல்லது அஞ்சலகத்தில் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ள முடியும்.

 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம்

60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம்

இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில், 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

 மாதம் ரூ.5000 எப்படி?
 

மாதம் ரூ.5000 எப்படி?

தினசரி ரூ.7 முதலீடு? 18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். இதன் மூலம் மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். ஆக மொத்தம் வருடத்திற்கு 60,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம்.

 குறைந்த ஓய்வூதியம்

குறைந்த ஓய்வூதியம்

இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 84 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும். எனினும் இந்த திட்டத்தினை பொறுத்தவரையில் இளம் வயதிலேயே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். ஒரு வேளை 30 வயதில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் எனில், 30 வயது எனும்போது நீங்கள் 30 வருடம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் 116 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெறலாம். இதே மாதம் 5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் 1,454 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் உங்கள் 60 வயதுக்கு பிறகு, இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: atal pension yojana

English summary

APY: how to get Rs.5000 monthly pension by investing just Rs.7 per day

APY: how to get Rs.5000 monthly pension by investing just Rs.7 per day/மாத மாதம் ரூ.5000 பென்ஷன் வேண்டுமா.. இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்க..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.