மேற்குவங்க கொலை தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ரூபா கங்குலி பேசினார். அவர் பேசும்போது ‘‘மேற்குவங்கத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுவது சாதாரணமாகி விட்டது. வாழ முடியாத மாநிலமாக மேற்குவங்கம் மாறிவிட்டது. அச்சம் காரணமாக மக்கள் வெளியேறுகிறார்கள். மக்கள் பேசவே முடியாத நிலை உள்ளது. மக்களைக் கொல்லும் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறது. மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். நாம் எல்லாரும் மனிதர்கள். கல்மனம் கொண்ட அரசியலை நாம் நடத்தவில்லை’’ என்றார். உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர் திடீரென கதறி அழுதார். இது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.