மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக ஏப்.6-ம் தேதி முதல் மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது: மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை: அரசின் துறைதோறும் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக வரும் ஏப்.6-ம் தேதி முதல் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என பேரவைத் தலைவர் மு.அப் பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் மா்ரச் 19-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 24-ம் தேதி இரு அமைச்சர்கள் பதிலுரையுடன் பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதத்துக்கான பேரவைக் கூட்டம் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கும் என பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மு.அப்பாவு கூறியதாவது:

ஏப்ரல் 6-ம் தேதி காலை 10 மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் பேரவைக்கூட்ட அரங்கில் தொடங்கும். அன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும். எந்தெந்த மானிய கோரிக்கைகள் எந்த நாட்களில் விவாதிக்கப்படும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். வரும் மார்ச் 30-ம் தேதி காலை 11 மணிக்கு என் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவெடுக்கும். அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் இடம்பெறும்’’ என்றார்.

தொடர்ந்து, விசிக உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேசும்போது, சட்டப்பேரவையில் இட நெருக்கடி இருப்பதாகவும், புதிதாக கருணாநிதி ஆட்சியில் சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு மாற்றலாம் என்றார். இதுகுறித்து அரசுக்கு ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பேரவைத் தலைவர் அளித்த பதில்: ஆரோக்கியமாக சட்டப் பேரவையில் என்ன பேச வேண்டுமோ அதை மட்டுமே அனுமதிப்பார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், ஏற்கெனவே கருணாநிதியால் சட்டப்பேரவைக்காக கட்டப்பட்டு, பிரதமர் மன்மோகன்சிங்கால் திறக்கப்பட்ட கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான், ஜெயலலிதாவும் தொடர்ந்து பழனிசாமியும் சட்டப்பேரவையை நடத் தினர். எனவே, எதைச் செய்தாலும் சரியாக முடிவெடுத்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.