தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 26-ம் தேதி தேதிக்கான தலைப்பாக ” முதலீட்டில் தமிழகம் முதல் மாநிலம்…! முதல்வரின் விருப்பம் நிறைவேற துபாய் பயணம் கை கொடுக்குமா? ” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Advice Avvaiyar
முதல் மாநிலமாக்க நினைத்தது,அதை நிறைவேற்றச் சென்றிருப்பது எல்லாம் ஓ.கே..எவ்வளவு பலன் தந்துள்ளது என்பதில் தான், பயணத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது. முந்தைய சி.எம் கூட சென்று வந்தார். என்ன பலன் கிடைத்தது என்று தெளிவாக விளக்க வேண்டும். கடின உழைப்பு, திறமை,நம்மவர்களிடம் இல்லையா என்ன?
பிரபு கிரிஷ்
உள்ளூரில் ஓணான் பிடிக்காமல்,வெளிநாடு சென்று ஒட்டகம் பிடித்து என்ன பயன்?இங்கே கொரானா காலத்தில் சுயதொழில் மற்றும் பல தொழிற்சாலைகள் நஷ்டத்தால் மூடிகிடக்கிறது,அவர்களுக்கு அரசு உறுதுணை புரிந்தால் நிறைய உள்ளூர்வாசிகள் பயனடைவர்!எது எப்படியோ முதல்வர் முதலீட்டை கொண்டு வருவார் என நம்புவோம்.
T Sampath Raj
நிச்சயமாக கைக்கொடுக்கும் அரசியல் ரீதியாக பல தொலைநோக்கு திட்டங்களோடே திரு ஸ்டாலின் அவர்கள் செயல்படுகிறார்.. பல விதமான கேலிகள் இங்கு உலவலாம். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதாக தெரியவில்லை நிச்சயமாக அவரின் தொலைநோக்கு பார்வையை உணர்ந்து பல முதலீடுகள் நம் மண் தேடி வரும் என்பதில் சற்றும் மாற்றமில்லை..
Narayanan Narayanan
இன்னும் ஒரு மாதம் துபாய் நாடகம் தான்
Nellai D Muthuselvam
முதலிடத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லும் முயற்சிகள் வரவேற்கதக்கது.முதலீடுகள் அனைத்து தரப்புக்கும் நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும். தமிழகத்திலேயே தொழில் தொடங்க தகுதியான படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிதி ஆதாரத்தை பெற அரசு துணை நின்றால் அந்நிய தேசத்தவர்களை சார்ந்திருக்க தேவையில்லை. தொழில்முனைவோர்களை உருவாக்க கூடிய தகுதி பகுத்தறிவு கல்வி முறை கொண்டு உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM