கீவ்:
கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷியாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என்றார்.
மேலும், எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ரஷியாவின் முயற்சிகளை எதிர்கொள்வதற்கு, கத்தார் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
‘ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமின்றி முழு உலகையும் அணு ஆயுதத்தால் அழிக்க முடியும் என்று தற்பெருமை பேசுகிறார்கள். 1990களில் உக்ரைன் தனது அணுசக்தி கையிருப்பை அகற்றியபோது ரஷியா உட்பட உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கின’ என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.