உக்ரைனை அழிக்க ரஷ்யா டாங்கிகளை பயன்படுத்துகிறது, ஆனால் நாங்கள் புரட்சிகரமான பிளாக்-செயின்(blockchain) தொழில்நுட்பத்தை நம்பி இருக்கிறோம் என உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது போரை தொடங்கிய நான்கு நாள்களிலேயே அந்த நாட்டின் ராணுவ நிதியை அதிகரிக்கும் நோக்கில், பழமையான போர் நிதி சேகரிப்பு முறையான நாட்டின் சொத்து கடன் பத்திரங்களை வெளியிட்டது.
அந்தவகையில், தற்போது உக்ரைனின் ராணுவ நிதியை மேலும் மேம்படுத்தும் நோக்கியில் புதிய மற்றும் புரட்சிகரமாக முறையில் NFTs(non-fungible tokens)-களை விற்பனை செய்ய இருப்பதாகவும் இவை உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் சூழலை மையப்படுத்தி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த NFTs(non-fungible tokens) என்பது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட இசை, ஓவியம் போன்ற கலைப்பொருட்களின் தொகுப்பாகும், இவை பிளாக்-செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கப்பட்டு உரிமம் பாதுக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக மேலே இருக்கும் டிஜிட்டல் ஓவியமானது, உக்ரைன் ரஷ்யா போரில் உயிர்பிழைப்பதற்காக கீவ் நகர சுரங்க பாதையில் தஞ்சம் அடைந்த கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்ததை குறிக்கிறது.
இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட 54 NFTs(non-fungible tokens)-களை உக்ரைன் ராணுவத்தின் நிதி பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்காக போர்களின் அருங்காட்சியகம் என்ற தலைப்பில் அடுத்த மாதம் தொடக்கம் முதல் விற்பனை செய்ய இருப்பதாக உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.