ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை இந்தியா கண்டித்து வந்துள்ள போதும் ஐநா.சபை வாக்கெடுப்புகளைத் தவிர்த்து விட்டது. இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரியான மிரா ராப் ஹூப்பர் இணைய வழி கருத்தரங்கில் பேசும் போது குறிப்பிட்டார் .வரலாற்று ரீதியாகக் காணும் போது இந்தியாவுக்கு நெருக்கமான உறவு இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்ள இந்தியாவுக்கு மாற்றுகள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.அண்மைக் காலங்களில் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய நட்பு கொண்டுள்ளது. சீனாவுக்கு எதிரான குவாட் அமைப்பிலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது.