உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடங்கிச் சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இந்தப் போர், இன்னும் முடியாமல் தொடர்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை போர் நிறுத்துவதாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கட்கரி நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டில், இது பற்றிப் பேசியதாவது, “இந்தியாவில், 80 சதவிகித எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகத் தான் சர்வதேசச் சந்தைகளுக்குள் எண்ணெய் விலை உயர்ந்து விட்டது” என்றவர், “சில நேரங்களில், இந்துத்துவா தவறான வழியில் முன்னிறுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்துத்துவா என்பது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரானது என்று விளக்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் யாருக்கும் பாரபட்சமாக இருந்ததில்லை” என்றார்.