ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையிலும் ரஷ்யா எப்போதும் விடவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தில் ரஷ்யா தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற பல நாடுகளுக்கு வரலாறு காணாத வகையில் அதிகளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று ரஷ்யா மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இது ரஷ்யாவுக்கு மாபெரும் வர்த்தக வழியை உருவாக்குவது மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகளின் தடை துடைத்து ஏறிய உள்ளது.
தங்கம்: சென்னை, கோவை, மதுரையில் 10 கிராம் தங்கம் விலை இதுதான்..!
மேற்கத்திய நாடுகள்
ரஷ்ய அரசின் முக்கிய அதிகாரியான பாவெல் ஜவல்னி அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை மேற்கத்திய நாடுகள் வாங்கி விரும்பினால் ரூபிள் மற்றும் தங்கத்தின் வாயிலாக வாங்கிக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்
கிரிப்டோகரன்சி
இதேபோல் சீனா மற்றும் துருக்கி போன்ற நட்பு நாடுகளுக்கு, தங்கள் சொந்த நாணயங்கள் வாயிலாகவோ அல்லது விருப்பும் இருந்தால் முன்னணி கிரிப்டோகரன்சி வாயிலாகக் கூடக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பெற முடியும் என அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் எனர்ஜி கமிட்டி
நீண்ட காலமாகச் சீனாவிற்கு ரூபிள் மற்றும் யுவான் வாயிலாகவும், துருக்கியுடன் லிரா மற்றும் ரூபிள் வாயிலாக வர்த்தகம் செய்ய அழைப்பு விடுத்து வருகிறோம். தற்போது பிட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி வாயிலாகவும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ரஷ்யாவின் எனர்ஜி கமிட்டியின் தலைவர் பாவெல் ஜவல்னி கூறியுள்ளார்.
SWIFT சேவை
அமெரிக்கா பிரிட்டன் போன்ற முன்னணி நாடுகள் விதித்த பல தடைகளில் வெளிநாட்டுக்கு மத்தியில் பணப் பரிமாற்றம் செய்யப்படும் SWIFT சேவையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யத் தத்தம் நாடுகளின் நாணயத்தின் வாயிலாகச் செய்யத் துவங்கியது.
பிட்காயின்
ஆனால் பிற நாடுகளின் நாணயங்களில் வர்த்தகம் செய்யவும் சில பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால், ரஷ்யா இந்தப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காகப் பிட்காயின் மற்றும் இதர முக்கியக் கிரிப்டோகரன்சி வாயிலாக வர்த்தகம் செய்ய அனுமதி கொடுத்துள்ளது.
ரஷ்யா பிட்காயின்
ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் வெளியான செய்தியை உறுதி செய்யும் வகையில் ரஷ்யா பிட்காயின் வாயிலான பணப் பரிமாற்றத்தை நடை முறை செய்யத் துவங்கியுள்ளது. ரஷ்யாவிடம் உலக நாடுகளுடன் பிட்காயின் வாயிலாகப் பணப் பரிமாற்றம் செய்யும் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது.
பிட்காயின் விலை
இதன் மூலம் ரஷ்யா மேற்கத்திய நாடுகள் தடைவிதிக்கப்பட்ட போதும் தவிர்க முடியாத சக்தியாக மாற உள்ளது. இது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்றால் மிகையில்லை. இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் விலை 1.05 சதவீதம் சரிந்து 44,358.80 டாலராக உள்ளது.
Russia ready to accept bitcoin as payment from china, Turkey soon to India; Big trouble for USA
Russia ready to accept bitcoin as payment from china, Turkey soon to India; Big trouble for USA ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. இனி பிட்காயின் போதும்.. சீனா, துருக்கி-க்குச் சிறப்புச் சலுகை..!