ரஷ்ய விமானங்களை கைப்பற்றிய பிரித்தானியா!


 பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இரண்டு தனியார் ஜெட் விமானங்கள் பிரித்தானியா அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரஷ்ய பில்லியனரும், எண்ணெய் நிறுவன தொழிலதிபருமான Eugene Shvidler-க்கு சொந்தமான விமானங்களே கைப்பற்றப்பட்டுள்ளது.

Eugene Shvidler-க்கு சொந்தமான ஜெட் விமானங்கள், பிரித்தானியாவின் Farnborough மற்றும் Biggin Hill விமான நிலையங்களில் மூன்று வாரங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில், உக்ரைனில் அப்பாவி மக்கள் இறக்கும் போது, புடினின் நண்பர்கள் ஆடம்பரங்களை அனுபவிக்க கூடாது என்று பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.

Chelsea FC உரிமையாளர் Roman Abramovich உடனான வணிக உறவுகளின் காரணமாக Eugene Shvidler மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.

Eugene Shvidler-ன் நிகர மதிப்பு 1.2 பில்லயன் பவுண்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட ஜெட் விமானங்கள் 45 மில்லியன் பவுண்ட் மதிப்புடையதாக இருக்கும் என பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லிவிவ் நகரில் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா! வெளியான வீடியோ ஆதாரம் 

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ளன், அதன் ஒரு பகுதியாகவே Eugene Shvidler-க்கு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.