உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யா போர் விமானங்கள் குண்டு போட்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து கரும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
லிவிவ் நகரில் மூன்று குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், ஒரு தகவல் தொடர்பு கோபுரம் குறிவைக்கப்பட்டதாக நகர சபை மற்றும் ஆளுநர் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனியர்கள் பிரித்தானியா வருவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது! போட்டுடைத்த லண்டன் மேயர்
போலந்தின் எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரம், ரஷ்ய தாக்குதல்களிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உள்ளது.
Fumaça sobre a área da torre de comunicação em Lviv https://t.co/Dw4ad75zNp pic.twitter.com/aIGHiMIgey
— Igor (@IgorCW_) March 26, 2022
மேலும், மேற்கில் இருந்து உக்ரேனியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடக்கூடிய இடமாக இருந்து வருகிறது.