#லைவ் அப்டேட்ஸ்:உக்ரைனில் மேலும் ஒரு நகரை ரஷிய படைகள் கைப்பற்றியதாக தகவல்

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 26,  3.00 p.m

உக்ரைன் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷிய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் மந்திரிகளை ஜோ பைடன் சந்திப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. 
மார்ச் 26,  01.20 p.m

துருக்கி அதிபர் எர்டோகன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

துருக்கிய அதிபர்  ரெசெப் தையிப் எர்டோகன் உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார், உக்ரைனின் நிலைமை மற்றும் மாஸ்கோவிற்கும், கீவ்வுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்தார் என்று எர்டோகனின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. 

துருக்கியின் அதிபர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, மற்ற தலைவர்களுடனான ஒரே ஒரு சந்திப்பில் துருக்கி மேற்கொண்ட முயற்சிகளை எர்டோகன் வெளிப்படுத்தினார். ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளைக் கொண்ட அங்காரா, தன்னை ஒரு நடுநிலைக் கட்சியாக நிலைநிறுத்தியுள்ளது. போரிடும் தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்க முயல்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மார்ச் 26, 12.20  p.m

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பில் இதுவரை 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில், அடுக்கு மாடி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் தாக்கப்படுவதால் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதுவரை அங்கு நடந்த போரில் ரஷியாவின் தாக்குதலில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
மார்ச் 26, 12.00 a.m 
ரஷியாவின் ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போவதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போர் தொடங்கியதில் இருந்து ரஷியா 1,100 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது. ரஷிய ஏவுகணையின் தோல்வி விகிதம் நாளுக்கு நாள் மாறுபடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 26, 11.00 a.m 
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 7  மூத்த ரஷிய ராணுவ தலைமை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 26, 08.20 a.m 

உக்ரைனுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை இங்கிலாந்து வழங்க உள்ளது.

இதன்படி உக்ரைனுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, உக்ரைன் முழுவதும் தற்போது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
மார்ச் 26, 07.30 a.m 

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  மீண்டும் ரஷியாவிடம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அமைதி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். 

மார்ச் 26, 07.10 a.m 
உக்ரைனுக்கு எதிரான ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் போர், “ஆத்திரமூட்டப்படுவதுடன், நியாயமற்றது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது” என்று ஒரு நேட்டோ அதிகாரி கூறியதுடன், உக்ரைனில் இரத்தக்களரியின் தீவிர நோக்கம், வேண்டுமென்றே அல்லது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மூலம் பொதுமக்களைக் கொன்று மாஸ்கோ போர்க் குற்றங்களைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
மார்ச் 26, 06.22 a.m 
வடக்கு நகரமான செர்னிஹிவில் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரஷிய ராணுவம் வேண்டுமென்றே உணவு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. போருக்கு முந்தைய 2,85,000 மக்கள்தொகையைக் கொண்டிருந்த நகரத்தில் தற்பொது 1,30,000 க்கும் குறைவான மக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 26, 4.19 AM

மார்ச் 26, 1.52 AM

ரஷியா கைப்பற்றிய ஹர்சன் நகரை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவர உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
வெளிநாட்டில் ரஷியா நடத்திவரும் நடவடிக்கைகள் (உக்ரைன் மீதான போர்) குறித்து போலியான தகவல்களை பரப்புவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்திற்கு அதிபர் புதின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மார்ச் 26, 1.23 AM

மார்ச் 26, 1.18 AM

மார்ச் 26, 00.49 AM



Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.