ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவர அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், 2020ஆம் ஆண்டில், 729,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளன.
அந்த ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய நாடுகள் எதெல்லாம் தெரியுமா?
இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன்!
ஆக, அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இத்தாலி. அந்நாடு, 2020ஆம் ஆண்டில் 131,800 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் 126,300 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது ஜேர்மனி. ஜேர்மனி, 2020இல் 111,200 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனாலும், அது 2019ஐ விட எண்ணிக்கையில் 20,900 குறைவு.
அதிக அளவில் ஜேர்மன் பாஸ்போர்ட் பெற்றவர்கள் துருக்கி, சிரியா மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு அடுத்தபடியாக பிரித்தானியர்கள் உள்ளார்கள்.
அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நான்காவது இடத்தில் இருப்பது பிரான்ஸ்.
என்றாலும், அது 2020ஆம் ஆண்டில் 86,500 பேருக்கு மட்டுமே புதிதாக குடியுரிமை வழங்கியுள்ளது.
ஐந்தாவது இடத்தில் இருப்பது ஸ்பெயின். ஸ்பெயின் 80,200 பேருக்கு 2020இல் புதிதாக குடியுரிமை வழங்கியுள்ளது.
பொதுவாகக் கூறினால், ஆண்களை விட அதிக பெண்கள் குடியுரிமை பெற்றுள்ளார்கள் (ஆண்கள் 49 சதவிகிதம், பெண்கள் 51 சதவிகிதம்).
அத்துடன், அதிக அளவில் குடியுரிமை பெற்றவர்களின் சராசரி வயது 33. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2020இல் குடியுரிமை பெற்றவர்களில் 36 சதவிகிதத்தினர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 42 சதவிகிதத்தினர் 25 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 23 சதவிகிதத்தினர் 15 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர் சிறுமியர்.