ஸ்டாலினுக்கு BMW கார் துபாய் அரசு வழங்கியதா? உண்மை என்ன?

Tamilnadu CM Stalin Dubai Trip Update : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்று முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் தொடங்கிய துபாய் எக்ஸ்போ தொழிற்கண்காட்சியில் பங்கேற்க சென்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாதங்கள் நடைபெறும் இந்த தொழிற்கண்காட்சியில், 192 நாடுகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தமிழகத்திற்கான அரங்கு அமைப்பதற்காக தமிழகத்திற்கு அரங்கு அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியம் கலாச்சாரம், தமிழ் மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும்  வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் நேற்று மாலை துபாய் சென்றடைந்தார்.

இதுவரை இந்தியாவில் வேட்டி சட்டையுடன் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்துவம் கையில் தோன்றிய முதல்வர் ஸ்டாலின், தற்போது வெளிநாடு பயணத்தில், கோட் சூட் போட்டுக்கொண்டு என்றும் இளமை என்பதை உணர்த்தும் வகையில், தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவருடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப நபர்களும் சென்றுள்ளனர்.

மேலும் முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த கண்காட்சியில் வரும் 31-ந் தேதி வரை தமிழக வாரமாக அனுசரிக்கப்பட் உள்ளது. இதற்காக தனி விமானம் மூலம் துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு துபாய் வாழ் தமிழர்கள் உட்பட பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து துபாய் எக்ஸ்போ 2022 கண்ட்சியின் தமிழக அரங்கை இன்று திறந்து வைத்தார்.

இந்நிலையில், துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய பிஎம்டபிள்யூ கார் வழங்கி துபாய் அரசு கவுரவித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த கார் துபாய் அரசு வழங்கியது இல்லை இந்திய தூதரகம் வழங்கியது. துபாய் சென்ற கேளரா முதல்வர் பினராயி விஜயனுக்கும் இதே கார்தான் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில்,முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே துபாய் அரசு கார் வழங்கியதா அல்லது இந்திய தூதரகம் வழங்கியதா என்பது தொடர்பான விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.