இந்தியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு நிதியாண்டின் இதுவரை 11,607 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 36,500 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM