அரசு சாரா அமைப்புகள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்து வரும் கல்வியாண்டில் 21 ராணுவப் பள்ளிகள் அமைக்கப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையின்படி முப்படைகளிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தரமான கல்வி வழங்கத் தனியார் ஒத்துழைப்புடன் 100 ராணுவப் பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 21 ராணுவப் பள்ளிகளை அமைக்கப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவை இப்போதுள்ள ராணுவப் பள்ளிகளில் இருந்து வேறுபட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ராணுவப் பள்ளி தொடங்கத் தூத்துக்குடி விகாசா பள்ளிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.