
3 மொழிகளில் ரீமேக் ஆகும் மோகன்லால் மகன் படம்
மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த மலையாளப் படம் ஹிருதயம். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கிய இந்த படத்தில் பிரணவ் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழில் வெளிவந்த ஆட்டோகிராப் மாதிரி ஒரு ஆணின் வாழ்க்கையில் வந்துபோன பெண்கள் பற்றிய கதை.
இந்த நிலையில் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. இதனை தமிழில் மாதவனும், ஹிந்தி, தெலுங்கில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோகரும் தயாரிப்பார்கள் என்று தெரிகிறது. இந்த இருவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் இதனை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.