3 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹிருதயம்

3 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹிருதயம்

3 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹிருதயம்

3/26/2022 5:16:51 PM

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடித்த மலையாள படம் ஹிருதயம். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் வாங்கி உள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: தொழில்துறையில் இந்த இரண்டு மதிப்புமிக்க மற்றும் மரியாதைக்குரிய பெயர்களுடன் இணைந்திருப்பது எங்கள் அணிக்கு ஒரு கனவு நனவாகும்.

எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்த மாதவன் சார், கரன்ஜோஹர் சார் ஆகியோருக்கு நன்றி. எங்கள் படத்தின் மீது நீங்கள் பொழிந்திருக்கும் அளப்பரிய அன்பிற்காக உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் சார்பில்  மனமார்ந்த நன்றி. என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.