புதுடில்லி:’ஐபோன் – 13 மினி’ போன்களில், 40 தமிழக மாணவர்கள் எடுத்துள்ள புகைப்படங்களை, ‘ஆப்பிள்’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் புகழ்ந்துள்ளார்.
உலகம் முழுதும், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிறுவனம், புதிய ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு போட்டிகளையும் நடத்தி
வருகிறது.அதன் ஒரு முயற்சியாக, ‘ஷாட் ஆன் ஐபோன்’ என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் போட்டியை, ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண் டிற்கான போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இவர்கள் அனைவரும், ஆப்பிள் ஐபோன் – 13 மினி மாடல் போன்களில் படம் பிடித்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள், சென்னையின் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 17ம் தேதி வரை, இவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நேற்று கூறியதாவது:தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 40 பேர், ஐபோன் – 13 மினி போன்களில், மிகச்சிறப்பான புகைப்படங்களை எடுத்துஉள்ளனர். இவை, சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement