Petrol and Diesel Price: ரஷ்யா- உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மீண்டும் 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அந்தவகையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43- காசுகளுக்கும், டீசல் ரூ.94.47-காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.03, டீசல் விலை ரூ.3.04 உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மக்களவையில் நடப்பாண்டிற்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உக்ரைன் போர்ச் சூழலே விலையேற்றத்திற்கு காரணம். நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்வு என நிதி மசோதா மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி’ புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் காண 25% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகம் ஆகின்றன.
Tamil Nadu News LIVE Updates:
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கூடத்தை பார்வையிட்ட ஸ்டாலின்!
“#DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் ‘இசைப் புயல்’ @arrahman அவர்கள் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பத்தை காண்பித்தார்.
தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார் pic.twitter.com/xnsuoAD2Az
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 25, 2022
துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று அவரது இசைக்கூடத்தை பார்வையிட்டார். அவருடன் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, கிருத்திகா ஆகியோரும் உடன் சென்றனர். ஏ.ஆர். ரஹமான், தனது புதிய ஆல்பமான “மூப்பிலா தமிழே..தாயே” பாடலை ஸ்டாலினுக்கு போட்டு காண்பித்தார்.
உலகின் மிக உயர்ந்த ஒளித்த தமிழ் பாடல்!
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
உலகின் மிக உயர்ந்த, துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடலை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட போது!
“ “
துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.
அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வரும் 31ம் தேதி மாலை அல்லது ஏப்ரல் 1ம் தேதி காலையில் டெல்லி திரும்ப உள்ளார். இந்தியா திரும்பியது, பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்
டெல்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கரூர், புலியூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தல், போதுமான உறுப்பினர்கள் வராததால் மீண்டும் ஒத்திவைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதேபோல், திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால், தென்காசி, குற்றாலம் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்த நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 8, திமுக 6, சுயேட்சை ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,660 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவுக்கு 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் 31வது நாளாக நீடிக்கிறது. ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கியதில், உக்ரைன் ராணுவ கட்டளை மையம் தகர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும். நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10. 7 சதவீதம் உயர்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவியிடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது.
துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார். pic.twitter.com/84lJGVdg6s
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 25, 2022
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக 5வது மாநில நிதி ஆணையத்தின் மூலம் ரூ.614 கோடி, மத்திய நிதி ஆணையத்தின் கீழ் ரூ.799 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி மற்றும் பதிவுத்துறையில் ரூ. 13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.