"அந்த ஒரு விஷயம் பிரச்னையா இருந்தது; இருந்தாலும், நல்லா நடிச்சிருக்கோம்!"- விக்ரம் பிரபு

‘ டாணாக்காரன்’ கதையை டைரக்டர் சொன்னப்போ என்ன தோணுச்சு?

“ஏதாவது புதுசா இருக்கணும்னு நினைச்சுதான் கதை கேட்பேன். புரொடியூசர் எஸ்.ஆர் பிரபு போன் பண்ணி கதையோட ஒன்லைன் சொன்னார். ரொம்ப நல்லாயிருந்தது. டைரக்டர் தமிழ்-ஐ மீட் பண்ணினேன். கதையை அழகாகச் சொன்னார். சொல்ற விஷயத்துலயே நிறைய இன்புட்ஸ் தெரிஞ்சது. அப்புறம்தான், போலீஸ் துறையில தமிழ் இருந்திருக்கார்னு தெரியவந்தது. படமா நல்லா எடுப்பார்னு நம்பிக்கையில படத்துல நடிச்சேன். படம் பார்த்தப்போதும் இதே பீல் கிடைச்சிருக்கு. முக்கியமான படமா இது இருக்கும்.”

“படத்துகாக என்ன மாதிரியான ட்ரெயினிங் எடுத்தீங்க?”

விக்ரம் பிரபு

“வெளியே யார்கிட்டயும் ட்ரெயினிங் போகல. டைரக்டரே படத்துகான இன்புட்ஸ் நிறைய வெச்சிருந்தார். இதனால, எந்த டவுட் கேட்டாலும் தமிழே க்ளியர் பண்ணிருவார். படத்தோட ஷூட்டிங்காக க்ரவுண்டுக்குப் போனப்போ ரொம்ப க்ளியரா எல்லாம் சொல்லிக்கொடுத்தார். போலீஸ் வார்த்தைகள் எல்லாம் ரொம்ப விவரிச்சு சொல்லிக் கொடுத்தார். ஆடியன்ஸுக்குப் படம் புரியறதுக்கு நாமளும் நல்லா புரிஞ்சு நடிக்கணும்னு நினைச்சு நடிச்சேன். படத்தோட ஷூட்டிங் வேலூர்ல நடந்தது. வெயில் காலத்துல ஷூட்டிங் நடந்ததால மொத்த யூனிட்டும் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு டீம் வேலைப் பார்த்திருக்காங்க. இது ப்ரீயட் படம்தான். 90-கள்ல நடக்குற கதை. அதுக்கு ஏத்த மாதிரி ஆர்ட் வொர்க் எல்லாம் பண்ணி முடிச்சிருக்கோம்.”

“போலீஸ் யூனிபார்ம் தாண்டி ட்ரெய்னர் யூனிபார்ம் போட்டு நடிச்சது எப்படியிருந்தது?

“ரொம்ப uncomfortable-ஆ இருந்தது. அந்த யூனிபார்ம் ரொம்ப தடியா இருக்கும். அடிக்குற வெயிலுக்கு யூனிபார்ம் போட்டுட்டு க்ரவுண்டுல ஓடுறதே கஷ்டமா இருந்தது. எல்லாருமே இதைப் பற்றி பேசி சங்கடப்பட்டிருக்கோம். ஆனா, கேரக்டருக்குத் தேவையானதை சரியா பண்ணணும்னு இதெல்லாம் தள்ளி வெச்சிட்டு ஓட ஆரம்பிச்சிட்டோம். பிட்னஸ் வைஸ் நிறைய வொர்க் அவுட் பண்ணுனேன். பிசிகல் ஆக்ட்டிவிட்டிஸ் அதிகம். இது எல்லாத்துக்கும் மேல காஸ்ட்டீயூம் எங்க எல்லாருக்கும் பிரச்னையா இருந்தது. இருந்தாலும், எல்லாரும் நல்லா நடிச்சிருக்கோம்.”

“மலையாள நடிகர் லால் நடிச்சிருக்காரே?”

லால்

“ஆர்டிஸ்ட்டா லால் சார் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படம் தவிர ‘பொன்னியன் செல்வன்’ படத்துலயும் நடிச்சிருக்கார். அவருக்கு வெயில் பிடிக்காது. ஷூட்டிங் வந்துட்டாலே, ‘இங்கேல்லாம் எப்படியிருக்கீங்க’னு கேட்டுட்டுதான் ஆரம்பிப்பார். இவரோட நடிப்பை ரசிச்சிக்கிட்டே இருப்பேன். பேசுற ஸ்லாங்க், வாய்ஸ் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும். ஒரு மேஜிக் எப்போவும் இவருகுள்ள இருக்கும். அப்பாவுக்கும் லால் சார் நடிப்பு ரொம்பப் பிடிக்கும்.”

“துல்கர் சல்மானுடனான நட்பு பத்திச் சொல்லுங்க?”

“சின்ன வயசுல இருந்தே நல்ல நட்பு இருக்கு. எப்போ சென்னை வந்தாலும் வீட்டுக்கு வருவார். பர்ஸ்ட் டைம் மும்பையிலதான் மீட் பண்ணுனோம். இந்திப் படத்துல நடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருப்பார். நினைச்ச மாதிரி இந்தில நடிச்சிட்டார். எந்த மாதிரியான படம் பண்ணுறேன்னு கேட்பார். எங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஒரே மாதிரியே இருக்கும். அதனாலதான் சீக்கிரம் க்ளோஸ் ஆகிட்டோம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.