கிறிஸ்ட்சர்ச்: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. நியூசிலாந்தில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. இதுவரை 6 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்றுள்ள இந்தியா, இன்று வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, வெர்மா 53, ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்கள் எடுத்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின், வோல்வர்ட் 79, குட்வில் 69 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து அரையிறுதியில் வாய்ப்பை இழந்தது.
கிறிஸ்ட்சர்ச்: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.நியூசிலாந்தில் பெண்களுக்கான உலக கோப்பை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.