ஆரம்பித்துவைத்த Dr இராமதாஸ்., டிவிட்டரை தெறிக்கவிடும் பாமகவினர்.! 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒருபோதும் விரும்பியதில்லை என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த நிறுவனத்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நெய்வேலி முதல் இரு நிலக்கரி சுரங்க விரிவாக்கம்; மூன்றாவது நிலக்கரி  சுரங்கம் ஆகியவை குறித்த மக்களின் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணவும், அதற்காக கடுமையாக போராட பா.ம.க. முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, இன்று என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக, பாமகவின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “#PMKAgainstNLCLandGrab
#NoNewCoalMines”
என்ற ஹேஷ்டேக்களை பதிவிட்டு, NLC நிறுவனம் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒருபோதும் விரும்பியதில்லை என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த நிறுவனத்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாவலனாக பாமக தொடர்ந்து செயல்படும்” என்று பதிவிட்டார்.

பாமக தொண்டர்களும் #PMKAgainstNLCLandGrab #NoNewCoalMines ஹேஸ்டேக் மூலம் டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக தங்களது முழக்கங்களை பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.