இணை பேராசிரியருக்கு | Dinamalar

புதுச்சேரி, : நல்லாசான் விருது பெற்ற புதுச்சேரி பல்கலைக்கழக இணைப் பேராசிரியரை பல்கலை துணைவேந்தர் பாராட்டினார்.உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் எட்டாம் ஆண்டு விழா, சென்னை நந்தம்பாகத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.

இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் இணைப் பேராசிரியரான ரவிக்குமாருக்கு இவ்விழாவில் நல்லாசான் விருது வழங்கப்பட்டது.மிகச்சிறந்த முறையில் ஆராய்ச்சியில் மாணவர்களை நெறிப்படுத்தியதற்காக ரவிக்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவரை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் பாராட்டினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.