உலகில் இரைச்சல் அதிகமுள்ள முதல் 10 நகரங்களில் ஐந்து நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
குடியிருப்புப் பகுதிகளில் ஒலியின் அதிகப்பட்ச அளவு 55 டெசிபல் என்றும், போக்குவரத்து, தொழிற்சாலைப் பகுதிகளில் 70 டெசிபல் என்றும் உலக நலவாழ்வு அமைப்பு வரையறுத்துள்ளது.
70 டெசிபலுக்கு மேல் இரைச்சல் இருந்தால் அது உடல்நலத்துக்குத் தீங்காகவும், ஒலிமாசாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு உலகின் ஒலிமாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தின் டாக்கா நகரம் 119 டெசிபல் ஒலிமாசுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத் 114 டெசிபல் ஒலிமாசுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மூன்றாமிடத்தில் உள்ளது.
மொரதாபாத் தவிர இந்தப் பட்டியலில் கொல்கத்தா, அசன்சோல், ஜெய்ப்பூர், டெல்லி ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.