எரிபொருள், சமையல் எண்ணெய், உரங்கள் ஆகியவற்றின் விலைகள் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
துபாயுடன் தடையற்ற வணிக உடன்பாடு செய்துகொண்டது குறித்துப் பேட்டியளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் சாதனை அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் குழுவினர் வந்து சென்றதாகவும் தெரிவித்தார். உக்ரைன் போரால் உலக நாடுகளில் எரிபொருள் விலை விரைவாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்தியாவில் உரங்கள், எண்ணெய், தானியங்கள் ஆகியவற்றின் விலை கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார்.