மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர் மூன்று மத முறைப்படி திருமணம் செய்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புருஷோத்தமன் என்ற இளைஞருக்கும், புவனேஷ்வரி என்ற பெண்ணுக்கும் இடையே, திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும், திருமணத்தை வித்தியாசமாகவும் நடத்த முடிவு செய்த புருஷோத்தமன் மூன்று மதங்களின் முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தமது ஆசையை வீட்டில் கூறியிருக்கிறார்.
இதற்கு, பெற்றோர்களும் ஒப்புக் கொண்ட நிலையில், மூன்று முறைப்படி பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். முதல்நாள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ முறைப்படியும், மறுநாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.
இஸ்லாம் முறைப்படி நிக்காவும், கிறிஸ்தவ முறைப்படி பரிசுத்த விவாகமும், இந்து முறைப்படி மாங்கல்யம் கட்டி திருமணமும் செய்து கொண்டனர்.