இனி எல்லோருக்கும் வார சம்பளம் தான்.. என்ஜாய் பண்ணுங்க.. இந்தியாமார்ட் முடிவு..!

பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை மாதத்தின் கடைசி வாரத்தில் ஏற்படும் நிதி சிக்கல்கள் தான், இந்தக் காலகட்டத்தில் அதிகமானோர் கடன் வாங்கவும், கிரெடிட் கார்டு பயன்படுத்தவும் அதிகளவில் முற்படுகின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும், ஊழியர்களின் Month End பயத்தைப் போக வேண்டும் என்பதற்காக நிலையான வாழ்க்கை முறையை அளிக்க வேண்டும் என்று நாட்டின் முன்னணி ஆன்லைன் மார்கெட்பிளேஸ் நிறுவனமான இந்தியாமார்ட் முடிவு எடுத்துள்ளது.

இந்தியாமார்ட் நிறுவனம்

இந்தியாமார்ட் நிறுவனம் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு கார்பரேட் நிறுவனம் தனது ஊழியர்கள் மாதத்தில் 4 முறை சம்பளம் அளிக்கும் முக்கியமான கொள்கை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது மாத சம்பளத்திற்குப் பதிலாக வாரச் சம்பளத்தை அளிக்க முடிவு செய்துள்ளது.

வார சம்பள முறை

வார சம்பள முறை

இந்த வார சம்பள முறை ஊழியர்கள் மாதாந்திர வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கும், அவர்கள் நிதி ரீதியாக ஒழுங்கமைக்கப்படுவதை எளிதாக்க உதவும் என இந்தியாமார்ட் நம்புகிறது. மேலும் மாத இறுதியில் நிதிநெருக்கடியில் சிக்குவதிலும், கடன் வாங்குவதிலும் இருந்து ஊழியர்கள் தப்பிக்கலாம்.

வெளிநாடுகள்
 

வெளிநாடுகள்

மேலும் இத்தகைய முறை அமெரிக்கா, நியூசிலாந்து, ஹாங்காங் போன்ற பல முன்னணி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக இந்தியாமார்ட் தான் வார சம்பள முறையை அறிமுகம் செய்கிறது. ஆனால் இது வீட்டு வாடகை, ஈஎம்ஐ போன்ற சுமைகளைக் கொண்ட ஊழியர்களுக்குப் பிரச்சனை தான்

ஆன்லைன் மார்கெட்பிளேஸ்

ஆன்லைன் மார்கெட்பிளேஸ்

1996ஆம் ஆண்டு வர்த்தகத்தை எளிதாக்க வேண்டும் என்ற இலக்குடன் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நேரடியாக இணைக்கும் ஆன்லைன் மார்கெட்பிளேஸ் தளத்தை உருவாக்கியது இந்தியாமார்ட். இந்நிறுவனத்தின் மூலம் பல சிறு குறு நிறுவனங்கள் இந்திய முழுவதிலும் இருந்து வர்த்தகத்தைப் பெற்றனர். இதனால் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் இந்தியாமார்ட் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

29% CAGR வளர்ச்சி

29% CAGR வளர்ச்சி

மார்ச் 31, 2019 நிலவரப்படி, இந்தியாமார்ட் நிறுவனம் சுமார் 8.27 கோடி பதிவுசெய்யப்பட்ட பையர்களையும், 55.5 லட்சம் (5.55 மில்லியன்) சப்ளையர்களையும் கொண்டுள்ளது. இந்தியாமார்ட்டின் வருவாய் 2014-19 நிதியாண்டில் 29% CAGR அளவில் உள்ளது. அதே வேளையில் 2019ஆம் நிதியாண்டில் சுமார் 20 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

3400 ஊழியர்கள்

3400 ஊழியர்கள்

இந்தியாமார்ட் நிறுவனம் இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் சுமார் 3400க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. அதே போல் இந்தியாமார்ட்-ன் வாடிக்கையாளர்கள் 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ளனர்.

முக்கிய முதலீட்டாளர்கள்

முக்கிய முதலீட்டாளர்கள்

இந்தியாமார்ட் நிறுவனத்தில் இன்டெல் கேபிடல், அமேடியஸ் கேபிடல், வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் மற்றும் குவோனா கேபிடல் போன்ற முன்னணி முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

சரி இந்தியாமார்ட்-ன் வார சம்பள முறை சரியானதா..? உங்கள் பதிலை கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IndiaMart Pays its Employees Salary 4 Times A Month

IndiaMart Pays its Employees Salary 4 Times A Month மாதத்திற்கு 4 முறை சம்பளம்.. இந்தியாமார்ட் முடிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.