பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. பொருளாதார சுணக்கத்திற்கு பிரதமர் இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும் 28 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.
மொத்தமுள்ள 342 எம்பிக்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இவர்கள் தற்போது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர். மேலும் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆளும் கட்சியைச் சேர்ந்த 50 அமைச்சர்கள் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
விமான விபத்தில் 132 பேரும் உயிரிழப்பு – 2வது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்லாமாபாத்தில் தெஹ்ரிக் கட்சியின் சார்பில் இன்று நடைபெற உள்ள “நீதியுடன் நிற்பது” என்ற பேரணியில், தனது ராஜினாமா குறித்த தகவலை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் யூ டியூப் சேனலின் பெயர் இம்ரான் கான் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த செய்திவிமான விபத்தில் 132 பேரும் உயிரிழப்பு – 2வது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!