இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்ட பின்னர், முதலாவது விமானம் இன்று (27) காலை 8.45ற்கு இலங்கையை வந்தடைந்தது.
இரத்மலானை விமான நிலையத்தின் விமான சேவைகள் 55 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் பிரதானமாக மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெறுகின்றன.
இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பெரும் எண்ணிக்கையில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
22 கோடி ரூபா செலவில் இந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதுதொடர்பான நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.