இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு முன்னாள் பெண் போராளிக்கு ..

பருத்திதுறையில் இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது கணவருடன் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் முன்னாள் எல்டீடீ போராளியொருவருக்கு அவரது வறுமை நிலையை கருத்தில் கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மனிதாபிமான அடிப்டையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு திங்கட்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பினூடாக கொழும்பு றோயல் கல்லூரியின் (1980 தமிழ் மொழித் பிரிவு) முன்னாள் மாணவரான கலாநிதி வல்லிபுரம் சிவகுமார் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, 16 வது இலங்கை காலாட் படையணியின் சிப்பாய்களால் மேற்படி வீட்டின் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பயனாளியான திருமதி. நிரோஜின் யோஹாம் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கட்டாயத்தின் பேரில் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டமையினால் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக செயற்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தார். மேசனாக தொழில்புரியும் அவரது கணவர் உடற் வலிமை குன்றியவயர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பருத்தித்துறையில் நடைபெற்ற வீட்டின் திறப்பு விழா நிகழ்வில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களுடன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததோடு, வீட்டின் சாவி பிரதம அதிதியால் பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. 55 வது படைப்பிரிவு தளபதி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, 551 மற்றும் 553 பிரிகேட் தளபதிகள், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கலாநிதி சிவகுமார் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி திரு. வசந்தன் பாலசுப்ரமணியம் அவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, பயனாளி குடும்பத்தினருக்கு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் ஊக்குவிப்புத் தொகை என்பனவும் வழங்கப்பட்டன. மேற்படி பெண் போராளி சரணடைந்து புனர்வாழ்வு பெறுவதற்கு முன்னதாக புலிகள் பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலுக்கமைய விசுவமடு பகுதியில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.