இஸ்லாமாபாதில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் பிரதமர் இம்ரான் கான் தமது ராஜினாமா முடிவை அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பிரதமர் அலுவலகம் என்ற பெயர் நீக்கப்பட்டு இம்ரான் கான் என்று பெயர் குறிப்பிட்டு ஏற்படுத்தப்பட்ட மாற்றம் இதற்கான ஊகங்களை அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர எதிர்க்கட்சிகளுடன் இம்ரான் கானின் கூட்டணிக் கட்சிகளும் சொந்தக் கட்சியினரும் ஒன்று திரண்டுள்ள நிலையில், தமது அரசியல் பலத்தைக் காட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டத்தை இம்ரான் கான் கூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
தமது ஆதரவாளர்கள் கடல் போல் பெருகி வருமாறு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் தமது பெரும்பான்மை பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள இம்ரான் கானுக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.