உக்ரைனின் லிவிவ் நகரை தாக்கிய ரஷ்ய ஏவுகணை; பற்றி எரியும் எரிபொருள் கிடங்கு!

லண்டன் (ராய்ட்டர்ஸ்) – மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் நகரில் உள்ள ராணுவ இலக்குகளை, மிக துல்லியமாக தாக்க வல்ல ரஷ்யாவின் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளது. 

லிவிவ் அருகே உக்ரைன் படைகளால் பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடங்கை ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதோடு,  டிரோன்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள், ரேடார்  அமைப்புகளையும் அழித்தது.  டாங்குகள் வைக்கப்பட்டிருந்த இடங்களையும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்கியதாக என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகள் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்கின்றன” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். Lviv பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களின் வீடியோவை அமைச்சகம்  வெளியிட்டது.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் எப்போதும் பச்சை நிற டி-ஷர்ட்டில் உலா வரும் காரணம் என்ன..!!

போலந்தின் எல்லையில் இருந்து 60 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள Lviv  நகரில் உள்ள நேட்டோ-உறுப்பு நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், ஏவுகணைத் தாக்குதல்களில் மக்கள் காயமடைந்ததாகக் கூறினர். Kyiv அருகே S-300 ஏவுகணைகள் மற்றும் BUK விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் ஆயுதக் களஞ்சியத்தை அழிக்க  ஏவுகணைகளையும் ரஷ்யா பயன்படுத்தியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் பல ஆளில்லா விமானங்களையும் அழித்தன.

ரஷ்யா உக்ரேனிய எரிபொருள் மற்றும் உணவு சேமிப்பு கிடங்குகளை அழிக்கத் தொடங்கியுள்ளது என்று உக்ரேனிய உள்துறை அமைச்சக ஆலோசகர் வாடிம் டெனிசென்கோவும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.