கீவ்,
உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தொடர்ந்து உக்ரைன் ஆயுத உதவிகளை பெற்று போரிட்டு வருகிறது. இதனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டை ரஷியா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷிய அதிபர் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் கிய்லொ படனொவ் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. உக்ரைனின் முழுமையான பகுதிகளை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த புதின் நாட்டை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளார்’ என்றார்.