உக்ரைன் மக்களை வரவேற்கும் அமெரிக்கா: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!


ரஷ்ய போரினால் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் 1,00,000 பேரை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரானது உலக அளவில் பல விதமான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் அகதிகள் நெருக்கடியை அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புள்ளிவிவர அடிப்படையில் இதுவரை உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 3.7 மில்லியன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வெளியேறிவிட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய போரினால் சொந்த தாய்நாட்டை விட்டு வெளியேறிய 1,00,000 உக்ரைனியர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஜோ பைடன் நேற்று (மார்ச் 26ம் திகதி) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதியாக தான் பொறுப்பேற்றதில் இருந்து ராணுவ உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக இதுவரை 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, போர் சூழ்நிலையால் உக்ரைனில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் பெரும்பாலும் அவர்களின் தாய்நாட்டின் அருகில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் இருக்க விரும்புவதாகவும், ஆனால் அமெரிக்காவும் தனது கடமையை உக்ரைனுக்கு ஆற்றும் விதமாக 1,00,000 உக்ரைனியர்களை அமெரிக்க ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

உக்ரைனில் ரஷ்ய மொழிக்கு ஆபத்தா? ஜெலென்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.