உ.பி.யில் 2-வது முறை முதல்வர் பதவியேற்ற ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் 52 அமைச் சர்களில் 31 புதிய முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலத் தில் பாஜக செல்வாக்குள்ள பகுதிகள் மற்றும் அனைத்து சமூகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிராமணர், தாக்குர் உள்ளடக்கிய உயர்குடிகள் 21, அதே எண்ணிக்கையில் ஓபிசி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் 8, பழங்குடி மற்றும் முஸ்லிம் பிரிவில் தலா ஒருவர் என அமைச்சர்களாகி உள்ளனர். இதன் பலன் பாஜக.வுக்கு உ.பி.யின் 80 தொகுதிகளுக்கான 2024 மக்களவை தேர்தலில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்கள் 24 பேர் வாய்ப்பை இழந்துள்ளனர். முக்கியமாக துணை முதல்வராக இருந்த தினேஷ் சர்மாவின் இடத்தில் பிரஜேஷ் பாதக் அமர்த்தப் பட்டுள்ளார்.
இந்துத்துவா ஆதிக்கம் கொண்ட தெய்வீக நகரங்கள் மதுரா, காசி மற்றும் அயோத்தியில் இருந்து ஒருவர் கூட அமைச்சராகவில்லை. மத்திய உள்துறை அமைச்சருக்கு நெருக்கமானவரும் மதுராவில் மறுதேர்வான எம்எல்ஏ காந்த் சர்மாவும் மறுவாய்ப்பை இழந் துள்ளார். காந்துடன் சேர்த்து தினேஷ் சர்மாவுக்கு வேறு சில முக்கியப் பொறுப்புகள் அளிக் கப்படும் என கூறப்படுகிறது. மற்ற வர்களில் பலரும் தம் துறையில் பெரிதாக சாதிக்காததால் வாய்ப்பை இழந்துள்ளனர்.
முதல்வர் ஆதித்யநாத், மேற்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள் ளார். இப்பகுதியின் ஜாட் சமூகத்தினரும் இணைந்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி இருந்தனர். இதனால், பாஜகவிற்கு எதிராக அப்பகுதியினர் திரும்பியதாகக் கருதப்பட்டது. இப்பகுதியில் சுமார் 100 தொகுதிகளில் பாஜக.வுக்கு கடந்த தேர்தலை விட குறைவாக 36 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். எனினும், இப்பகுதியைச்சேர்ந்த 25 பேருக்கு அமைச்சரவையில் ஆதித்யநாத் இடமளித் துள்ளார். முஸ்லிம்களுடன் சேர்ந்துஅதிகம் வசிக்கும் ஜாட் சமூகத்தில் 8 எம்எல்ஏக்களில் 3 பேர் அமைச் சர்களாகி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதி வாரணாசி இடம்பெற்றுள்ள உ.பி.யின் கிழக்கு பகுதியில் பாஜக வலுவாக உள்ளது. இங்கு 18 எம்எல்ஏ.க்கள் அமைச்சர்களாக்கப்பட்டு உள்ளனர். மத்திய பகுதியில் கடந்த முறையை விட 2 பேர் குறைவாக 7 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். வறட்சி பகுதியான புந்தேல்கண்டில் ஒரே ஒரு அமைச்சராக பாஜகவின் மாநில தலைவர்ஸ்வதந்திர தேவ் சிங் இருந்தார்.தற்போது அவருடன் கூடுதலாக இருவருக்கு வாய்ப்பு கிடைத் துள்ளது.
கான்பூர் பகுதியில் இருந்து ஒருவர் கூட அமைச்சராகவில்லை. உ.பி.யில் மொத்தமுள்ள 75-ல் 36 மாவட்டங்களை சேர்ந்த வர்களுக்கு மட்டுமே அமைச்சரவை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதர 39 மாவட்டங்கள் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் கொண்டவையாக உள்ளன. பாஜக கூட்டணிகட்சி அப்னா தளம் (சோனுலால்), நிஷாத் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில் பாஜக.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்றவர்களும் இந்த முறை அமைச்சராகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
இதற்கு காரணம், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக.வின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.