இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்த போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை விட குறைந்த விலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்திருந்தது.
ஆனால் இலங்கை அரசாங்கம் அதிக விலை கொடுத்து டுபாயில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இரண்டாவது முறையாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள் இன்றி அரசாங்கங்கள் இடையிலான பரிவர்த்தனை முறையின் கீழ் இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்ய அரசாங்கம் முன்வந்துள்ளது.
நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.