கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக, வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக சிறப்பான வங்கி வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தின.
தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ள நிலையில், வங்கிகள் அந்த சிறப்பு திட்டங்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தன.
மார்ச் 28 – 29 தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக்.. என்னவெல்லாம் பாதிக்கும்..?
முடிவுக்கு வருமா?
இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் கொரோனா காலத்தில் கூடுதல் வருமானத்தினை பெறவும், அதுவும் பாதுகாப்பான வருமானத்தினை பெறவும் வழிவகுத்தன. எனினும் தற்போது பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா இந்த திட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்
ஆனால் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப் திட்டம் மார்ச் 31, 2022வுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த திட்டத்தினை செப்டம்பர் 31, 2022 வரையில் நீட்டித்துள்ளது இவ்வங்கி.
இந்த திட்டத்தில் சாதாரண வைப்பு நிதி திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தினை காட்டிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களில் இன்னும் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் சாதாரண பொதுமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை விட, இந்த திட்டத்தில் 0.75% கூடுதலாக வட்டி வழங்கப்படுகின்றது.
பேங்க் ஆப் பரோடா ஸ்பெஷல் எஃப்டி திட்டம்
பேங்க் ஆப் பரோடாவில் வழங்கப்பட்டு வரும் ஸ்பெஷல் எஃப்டி திட்டத்தினை வழங்கி வருகின்றது. இது 60 வயதுக்கு மேற்பட்டோர்செய்யும் டெபாசிட் தொகையில் 1% கூடுதல் வருமானம் பெற வழிவகுத்தது. இது மூத்த குடிமக்களுக்கு 5 – 7 அண்டுகள் வரையில் 0.50% வரையில் கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழிவகுத்தது.
பேங்க் ஆப் பரோடா நீட்டிக்கவில்லை
ஹெச்.டிஎ.ஃப்.சி வங்கி அடுத்த ஆறு மாதங்கள் இந்த சிறப்பு திட்டத்தினை நீட்டித்திருந்தாலும், இதுவரையில் பேங்க் ஆப் பரோடா நீட்டிக்கவில்லை. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ கடந்த மாதமே இந்த வீகேர் திட்டத்தினை செப்டம்பர் 2022 வரையில் நீட்டித்தது நினைவுகூறத்தக்கது.
bank of Baroda senior citizen Special FD scheme may end from april 1, 2022
bank of Baroda senior citizen Special FD scheme may end from april 1, 2022/ஏப்ரல் 1ல் இருந்து இந்த திட்டம் முடியப் போகுதா.. உண்மை நிலவரம் என்ன?