கார்களின் விலையை ஏப்ரல் மாதம் முதல் உயர்த்த உள்ளதாகப் பல்வேறு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வாகனத் தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம், பிற உலோகங்கள், கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இதனால் ஏப்ரல் 1 முதல் தங்கள் வாகனங்களின் விலையை இரண்டு முதல் இரண்டரை விழுக்காடு உயர்த்த உள்ளதாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் 4 விழுக்காடு வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
BMW நிறுவனம் வாகனங்களின் விலையை மூன்றரை விழுக்காடு வரை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மூன்று விழுக்காடு விலை உயர்வை அறிவித்துள்ளதால், அதன் வாகனங்களின் விலை இப்போதுள்ளதைவிட ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 5 இலட்ச ரூபாய் வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.