ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்படும் இன்றியமையாத மருந்துகளின் விலை 10 புள்ளி 8 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது.
வலி நிவாரணிகள், இதய நோயாளிகளுக்கான மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலையை 10 புள்ளி 8 விழுக்காடு அளவுக்கு உயர்த்திக் கொள்ளத் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 850 வகையான மருந்துகளின் விலை உயரும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் 2020ஆம் ஆண்டில் ஒன்று புள்ளி எட்டு எட்டு விழுக்காடும், 2021ஆம் ஆண்டில் அரை விழுக்காடும் மட்டுமே மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டில் 10 விழுக்காடு உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.