கேந்திரபரா- ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரையில் லட்சக்கணக்கான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் முட்டை போடுவதற்காக கரை பகுதியில் குவிந்தன.
அரிய வகை இனமான, ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் ஒடிசாவின் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் முட்டையிட வருகை தருவது வழக்கம். கடற்கரையில் முட்டையிட்டு விட்டு இந்த ஆமைகள் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் 9 – 23 வரையிலான காலகட்டத்தில் 3.50 லட்சம் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் ஒடிசா கடற்கரையில் முட்டையிட்டன.
இந்த ஆண்டுக்கான முட்டையிடும் பருவம் சற்று தாமதமான நிலையில், கடந்த 25ம் தேதி மட்டும் ஒரே நாளில் 2.45 லட்சம் பெண் ஆமைகள் ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரை பகுதியில் குவிந்தன. இந்த முட்டைகளை, நரி, நாய் போன்ற இதர விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க 24 மணி நேர கண்காணிப்பு பணியை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
கேந்திரபரா- ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரையில் லட்சக்கணக்கான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் முட்டை போடுவதற்காக கரை பகுதியில் குவிந்தன.அரிய வகை இனமான, ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் ஒடிசாவின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.